Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர் பொலிஸாருடன் சேர்ந்து தன்னைத் தானே தேடிய விநோத சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.
50 வயதான பெய்ஹன் முட்லு(Beyhan Mutlu) என்பவர், மது அருந்திவிட்டு தனது வீட்டுக்குச் செல்லாமல் , அப் பகுதியில் தனியாக உலவிக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்த பலரும் அக்குடும்பத்தினருக்கு உதவும் வகையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே பொலிஸாரும் இப்பணியில் இணைந்து கொண்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உலவிக்கொண்டிருந்த முட்லுவும் தன்னைதான் தேடுகின்றனர் என்பது தெரியாமல், ‘யாரையோ தேடுகிறார்கள்... நாமும் உதவுவோம்’ என அவர்களுடன் இணைந்திருக்கின்றார்.

ஒருகட்டத்தில் சோர்வடைந்த அனைவரும், அவரின் பெயரைச் சொல்லி கத்தியுள்ளனர். சத்தம் கேட்டு அவர் வந்துவிடுவார் என நினைத்து அவர்கள் கத்தியபோதுதான் எல்லோரும் தன்னைத்தான் தேடுகின்றார்கள் என்று புரிந்து நான் இங்கேதான் இருக்கிறேன்” எனக்கூட்டத்துக்குள் இருந்து குரல் கொடுத்திருக்கிறார்.
இதைக்கண்ட மக்கள் அனைவரும், சில நிமிடங்கள் அதிர்ச்சியடைந்து பின்னர் நடந்ததை புரிந்துக்கொண்டு சிரித்தபடி அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026