2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

நாய்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டோக்ஸ்டிவல்

Freelancer   / 2021 ஜூன் 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் வருடாந்தம் கொண்டாடப்பட்டு வரும் நாய்களுக்கான விழாவான ‘டோக்ஸ்டிவல்‘ கடந்த வருடம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற இவ்விழாவைக் காண பல நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவது வாடிக்கையாகும்.இருப்பினும், `கொவிட்-19 காரணமாக’ இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வரவு வழமையை விட குறைவாகவே காணப்பட்டது. பிரித்தானியாவின் பேர்லி பூங்காவில் இடம்பெற்ற இவ்விழாவில்,பல வகையான மற்றும் பல வடிவிலான நாய்கள் பங்குபற்றின.

அவை அங்குள்ள குளத்தில் நீந்தியும், குரைத்தும், விளையாடியும் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. உண்மையில் இது அனைவரும் பார்த்து இரசிக்கக் கூடிய நிகழ்வாக அமைந்திருந்தது, என இவ் விழாவில் பங்குபற்றிய பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தாம் நாய்கள் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இவ்விழாவை ஆரம்பித்ததாக,  விழாவின் ஏற்பட்டாளர்கள் கூறுகின்றனர். இவ்விழாவில், ஆரம்ப காலத்தில் சுமார் 8000 பேர் வரை கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .