2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

சிகிரெட் கையில் இருப்பதை மறந்து பெட்ரோல் நிரப்பிய நபர்.. உடல் கருகி உயிரிழப்பு!

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவனக்குறைவால் நாட்டில் பல விபரீதங்கள் நடக்கின்றன. சில சமயம் அவை உயிறையே பறிக்கும் அளவிற்கு அபாயகரமானதாக மாறிவிடுகிறது. 

இதே போல, கவனக்குறைவால் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  தமிழ்க்குடிமகன் என்பவர் சென்னையில் ஓட்டோ ஓட்டி வந்தார். இவர் வழக்கம் போல இன்று காலை அடையாறு காந்தி மண்டபம்  ஓட்டோ ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். 

அப்போது அவரது ஓட்டோவில் பெட்ரோல் இல்லாமல், ஓட்டோ பாதி வழியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து அவர் ஓட்டோவில் பெட்ரோல் போடுவதற்காக அருகே இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கேனில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். 

பெட்ரோல் வாங்கிக்கொண்டு வரும் வழியில் இவர் சிகிரெட் பிடித்துக் கொண்டே வந்துள்ளார். 

கேனில் இருக்கும் பெட்ரோலை ஓட்டோவில் ஊற்ற முயன்ற போது கையிலிருந்த சிகிரெட்டை மறந்த தமிழ்க்குடிமகன், அப்படியே பெட்ரோல் ஊற்றியுள்ளார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த சிகிரெட்டின் தீப்பொறி பெட்ரோல் டேங்க்கில் விழுந்ததில், அவர் மீது தீப்பற்றியுள்ளது. இதனைக் கண்ட மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .