Ilango Bharathy / 2021 ஜூலை 25 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவைச் சேர்ந்த ‘வெரோனிக்கா டிச்கா‘ என்னும் பெண் தனது செல்லப்பிராணியான ‘ஆர்ச்சி‘ என்னும் கரடியுடன் சேர்ந்து நொவோசிபிர்ஸ்க் என்னுமிடத்தில் உள்ள ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
வெரோனிக்கா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விலங்குகள் பூங்காவிலிருந்து இக் கரடியை மீட்டு எடுத்து தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

அவர் ஆர்ச்சியுடன் தூண்டில்களைக்கொண்டு படகில் இருந்தபடி மீன் பிடிப்பதும், கட்டியணைப்பதும் போன்ற காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து வெரோனிக்கா கருத்துத் தெரிவிக்கையில் ”ஆர்ச்சியை ஒரு விலங்குகள் பூங்காவிலிருந்து மீட்டெடுத்தோம். எனினும் அதன் மேல் கொண்ட அன்பினால் என்னால் ஆர்ச்சியை மீண்டும் காட்டில் விடமுடியவில்லை.ஆர்ச்சி எங்களுடனேயே தினமும் பொழுதைக் கழிப்பதுடன் எங்களுடன் மிகுந்த அன்புடனும் இருக்கிறது. ஆர்ச்சியும் நானும் உணவை பகிர்ந்து கொள்கிறோம். அது பயப்படும் பொழுது என் அணைப்பில் தூங்குகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .