2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

‘பாலியல் இன்பத்தை இழந்துவிட்டேன்’; 10,000 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 08 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசம், ரத்லமில்லைச்  சேர்ந்தவர் காந்தீலால். “35 வயதான அவரும், அவரது நண்பரும்,” வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறித்   தன்னைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகப்” பெண்ணொருவர், கடந்த 2018 ஆம் ஆண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த காந்தீலாலையும் அவரது நண்பரையும்  கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில்  காந்தீலால் மற்றும் அவரது நண்பர் மீதான குற்றங்களை அரசு தரப்பினரால்  நிரூபிக்க முடியாமல் போனதால், 666 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் இருவரும்  விடுவிக்கப்பட்டனர்.

 இந்நிலையில், தன் மீது போடப்பட்ட போலி வழக்கினால் சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிட்டதாகவும், இதனால் தனக்கு மத்தியபிரதேச அரசு 10,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் காந்தீலால்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 குறித்த மனுவில் மேலும் ”கடந்த 2 2 ஆண்டுகளில் நான் எதிர்கொண்ட துன்பங்களை விவரிக்க முடியாது. சிறையில் நான் சந்தித்த சோதனைகளால் சிறையில் இருந்து வெளியே வந்தபின்னும் தோள் தொடர்பான நோய், நிரந்தர தலைவலி உட்பட பல நோய்களை சந்தித்தேன்.

 6 பேர் கொண்ட என் குடும்பத்தில் நான் மாத்திரம் தான் பணம் ஈட்டுபவன். போலி குற்றச்சாட்டுகளால் என் வாழ்க்கை பாழாகிவிட்டது. மேலும், 'மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தையும் இதனால் அனுபவிக்க முடியாமல்  போனது. எனவே தொழில் மற்றும் வேலை இழப்பு, நற்பெயர் இழப்பு, உடல் மற்றும் மனம் சார்ந்த வலி, குடும்ப வாழ்க்கை இழப்பு, கல்வி வாய்ப்பு இழப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் இழப்பு ஆகிய காரணங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்”என்று அம் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X