Editorial / 2021 மே 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்துள்ளமையால் அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் மகராஷ்டிராவில் அமகத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் ஊரடங்கு விதிகளை மீறிய தனது தாயை தண்டித்துள்ள சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ரஷீத் சேக் என அழைக்கப்படும் குறித்த நபர் நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருவதோடு அவரது தாயார் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரஷீத் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவரது தாய் தள்ளுவண்டியில் சந்தைப் பகுதியில் நின்று காய்கறி வியாபாரம் செய்துள்ளார்.

ஊரடங்கில் வீதிவீதியாக சென்று காய்கறி வியாபாரம் செய்யவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் தள்ளுவண்டியை நிறுத்தி விற்பனை செய்து கொண்டிருந்த தனது தாயிடமிருந்து காய்கறிகளை ரஷீத் பறிமுதல் செய்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே தாயிடம் எச்சரித்தும் அவர் விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுத்ததாக ரஷீத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ரஷீத்தின் நேர்மையை அப் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
27 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago