2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

4 வயது புலிக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் விலங்குகள் சுதந்திரமாக நடமாடித் திரிவதை அவதானிக்க முடிந்தது,

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா எனப்படும் கொவிட்-19  என்ற கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயதான நடியா என்ற பெயர்கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம்  கொவிட்-19 தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது

இந்தப் புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அதற்கு அருகில் வாழ்ந்துவந்த இரண்டு சைபெரியன் புலிகள், ஆபிரிக்க சிங்கங்களுக்கும் அதே அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

அவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

நடியா, மற்ற ஆறு பெரிய புலிகளுடன், மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

குறித்த வனவிலங்குப்பூங்கா மார்ச் மாதம் 16ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .