Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 18 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான பிரமாண்டமான ஏற்ப்பாடுகள் சிறப்புற இடம்பெற்று வருகின்ற நிலையில், அனைவரையும் அச்சமின்றி நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் அவர்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.
அந்தவகையில், வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி லியோ அடிகளார் உள்ளிட்ட பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி நினைவேந்தல் ஏற்பாட்டு வேலைகளையும் சிரமதான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை (16) காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு வருகைதந்த அவர்களால் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றும் ஏற்பாட்டு பணிகள் இடம்பெற்றன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர், நினைவேந்தல் செய்ய எந்த தடையும் இல்லை என தெரிவித்தாலும் நினைவேந்தல் வளாகத்துக்குள் இராணுவ காவலரண் அமைக்கப்பட்டமைக்கு உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு நினைவேந்தல் வளாகத்தை சூழ பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் நினைவேந்தல் வளாகத்துக்குள் வருபவர்களை பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்தும் வருவதாக உறவுகள் குற்றம் சுமத்துகின்றனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி அம்பாறையில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி போரணிகள் ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடிய மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்ததுடன், உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
அதன் காரணத்தினால், முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கையும் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago