2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்

Freelancer   / 2023 மே 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்  கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதன் போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. 

இச் சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால்கஞ்சியினை பெற்று குடித்தனர்.

வீதி போக்கு வரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும்புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிந்தன. பின்னர் அவை  சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்தன. 

இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .