2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி)  மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார்.

மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற  குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை தூண்டுவதற்கு காரணமாக இருந்தது சேரலாதன் என்பவராவார்.

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன், ஜான் மகேந்திரன் போன்ற இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமையுடன் நீலமாகி வரும் கடல் சிறுகதை தொகுதியும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக இயக்குநர் பாராதிராஜா, மற்றும் நடிகர் மணிவண்ணன் போன்ற தென்னிந்திய இயக்குநர்கள், நடிகர்களுடன் நண்பனாக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு 

இறுதிக்காலத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

செ.கீதாஞ்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .