Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரைந்து வருடங்களாய்
என் அண்ணனின் வரவினை
எதிர்பார்த்தபடி என் குடும்பம்
கதறித்துடிக்கிறதே இறைவா!
காணாமல் ஆக்கப்பட்டானா?
கல்லறைக்குள் புதைக்கப்பட்டானா?
சிறைக்குள் தவிக்கின்றானா?
சிதைந்து சின்னாப்பின்னமாகினானா?
உறுதியாய் ஏதும் முடியவில்லை!
உண்மையான தகவல் ஏதும்,
இன்றுவரை கிடைக்கவில்லை!
போதும் இறைவா நீ தந்த வேதனை!
தயவு செய்து ஒருமுறையேனும் என்,
அண்ணனின் மதிவதனம் தனைக்
காணுகின்ற வாய்ப்பை கொடு இறைவா!
அப்போது தான் என் குடும்பம்,
சிரிக்கும் ஒலி கேட்கும்!
25 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago