2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் இருந்து 1,529 ரவைகள் மீட்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து,  1,529  துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (16) மாலை, தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றை துப்புரவு செய்யும் போது, வெடிபொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், கிணற்றை சுத்தம் செய்பவர்களை தொடர்ச்சியாக துப்புரவு செய்யுமாறு கூறியுள்ளார்கள்.

கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது, கிணற்றில் இருந்து 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .