Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 நவம்பர் 27 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று காலை 5 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.
எனினும் நீண்ட நேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார்.
இதன்போது அவரது தோட்டக்காணியில் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியைசேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார இணைப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago