2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞன் படுகாயம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - திருகோணமலை வீதி, நாயாறு பகுதியில், நேற்று (27), மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு, நாயாறு பகுதியைச் சேர்ந்த ஏ.கதீஸ்கரன் (வயது 23) என்ற இளைஞனே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

 

செம்மலையில் இருந்து நாயாறு நோக்கி குறித்த இரைளஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனைவடலியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது இளைஞன் தூக்கிவீசப்பட்ட நிலையில், பனை வடலிக்குள் இருந்த பிளேட் கம்பி வெட்டியதில் கழுத்து குரல் வளைப்பகுதி துண்டாக வெட்டப்பட்டப்பட்டது.

இதையடுத்து, குறித்த இளைஞன், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .