2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் திடீர் வீதி சோதனை

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் பகுதியில், இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று  (29) மாலை முதல், மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில்,  மக்களை சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, குறித்த வீதிகள் ஊடாக மோட்டார் சைக்கிள், ஓட்டோ மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு, அவர்களின் உடமைகளை சோதனை செய்யப்படுவதோடு, வாகனங்களும்  சோதனை செய்யப்படுகின்றன.

திடீரென குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதால், அந்தவீதியூடாக செல்லும் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .