Niroshini / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட இவ்வாண்டின் அதிகளவான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக, பொலிஸ் திணைக்கள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியிருக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், இராமநாதபுரம், அக்கராயன், ஜெயபுரம், நாச்சிக்குடா, பூனகரி, பளை, கிளிநொச்சி உள்ளிட்ட 08 பொலிஸ் நிலையங்களிலும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதாவது, 2020ஆம் ஆண்டில் 07 சிறுவர்கள், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிர்பதாகவும் இவ்வாண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும், பொலிஸ் நிலைய தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
இதனைவிட, சிறுவர்கள் துன்புறுத்துதல், சிறுவர்களுக்கு காயம் விளைவித்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகளும் அதிகளவில் பதிவாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது.
25 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago