2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

’தனியார் போக்குவரத்து சேவை நாளை இடம்பெறும்’

Niroshini   / 2021 ஜூன் 20 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மன்னாரில் இருந்து வடக்கு மாகாணத்துக்கான தனியார் போக்குவரத்து சேவை, சுகாதார நடைமுறைகளுடன், நாளை (21) முன்னெடுக்கப்படும்' என்று, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நாளை (21) அதிகாலை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், மன்னாரில் இருந்து வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறுமென்றார்.

அத்துடன், வடமாகாணத்தை தவிர, ஏனைய மாகாணங்களுக்கு இடையில் சேவைகள் இடம்பெறாதெனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .