Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2022 ஜனவரி 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நேற்று (05) இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது விடுதி பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல் செயற்பட்டு வந்த, பீ.பீ.மானவடு அவர்களுக்கு, உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேவை கருதிய அவசர இடமாற்றமாக குறித்த இடமாற்றம் இரவோடு இரவாக வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது விடுதி முன்பாக, இரவு இனந்தெரியாத நபர்களால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அவரது விடுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
2 hours ago