2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மாமனின் கையை துண்டாக்கிய மருமகன்

Niroshini   / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

தனது மாமனின் கையை வெட்டி துண்டாக்கிய ஆலய பூசகரான மருமகன் தானும் நஞ்சருந்திய சம்வமொன்று, கிளிநொச்சி - கண்டாவைள கிராமத்தில், நேற்று (11) இரவு  இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக, தனது மாமனின் கையை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கம் இடையில் வெட்டித் துண்டாக்கிய மருமகனான ஆலய பூசகர், துண்டாக்கிய கையை வாய்க்காலுக்குள் எறிந்துள்ளார்.

கை  துண்டாடப்பட்ட நிலையில், 57 வயதான மாமனார், தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .