2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

முசலி பிரதேச சபை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

வன்னி, முசலி பிரதேச சபை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இரு மாடிகளுடன் சகல வசதிகளையும் கொண்ட இக்கட்டிட நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு வைபவத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

25 வருடங்களின் பின்னர் முசலி பிரதேச சபைக்காக தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு தற்போது இயங்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .