2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

தாக்குதல்களால் ‘தேயிலை ஏற்றுமதிக்குப் பாதிப்பில்லை’

ச. சந்திரசேகர்   / 2019 மே 29 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் தேயிலை ஏற்றுமதிக்கு உடனடியாகப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஜோன் கீல்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது. தேயிலை உற்பத்தி முகவராகச் செயற்படும் ஜோன் கீல்ஸ் லிமிடெட் வெளியிட்டிருந்த வாராந்த அறிக்கையில், ஏப்ரல் மாதத்தின் தேயிலை ஏற்றுமதி 20.8Mkg ஆகப் பதிவாகியிருந்ததாகவும், இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.  

இருந்த போதிலும் ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 23.6Mkg ஆக பதிவாகியிருந்தது, இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.6 சதவீத சரிவாகும். தாழ்நில தேயிலை உற்பத்தி அதிகளவு இடம்பெற்றிருந்ததுடன், மொத்த உற்பத்தியில் 61.6 சதவீத பங்களிப்பை வழங்கியிருந்தது. உயர்நில தேயிலை உற்பத்தி 22.6 சதவீத பங்களிப்பையும் மத்தியநில தேயிலை உற்பத்தி 15.8 சதவீத பங்களிப்பையும் பதிவு செய்திருந்தன.   

நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்கான ஒன்று திரட்டிய ஏற்றுமதி அளவு 94.4 Mkg ஆகும். இந்த ஆண்டில் 4.7 Mkg தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில், தேயிலை ஏற்றுமதி பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.5 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.   

இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதில் ஈராக் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தது. துருக்கி, ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகளும் இலங்கைத் தேயிலையின் மீது நாட்டம் காண்பித்திருந்தன. தெரிவு செய்யப்பட்ட Western High Grown BOPF தேயிலை தெரிவுகளுக்கு அதிகளவு கேள்வி காணப்பட்டது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .