2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நித்திரையில் இருந்து எழும்பாதவருக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 மே 11 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு உணவை உட்கொண்ட பின்னர், நித்திரைக்குச் சென்ற 71 வயதான  நபரொருவர் நித்திரையிலேயே உயிரிழந்த சம்பவம் காலி அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அவரது  மனைவி  தேநீருடன் சென்று அதிகாலை 5.30 மணிக்கு  எழுப்பியுள்ளார். எனினும், அவர் எழும்பவில்லை, எவ்விதமான அசைவுகளும் அவரிடம் தென்படவில்லை. அதனையடுத்து  அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்துள்ளார். எனினும், அக்கம் பக்கத்தினர், ஓடோடிவந்து அவரை எழுப்பியுள்ளனர். எனினும், அவர் ஏற்கெனவே  உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சடலம், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போ​து, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .