2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவால் கூடியது

Editorial   / 2022 ஜனவரி 03 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்க வர்த்தக சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.

செட்டியார் தெரு உள்ளிட்ட இலங்கை சந்தையில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 112,500 ரூபாவுக்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுண்  121,500க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

உலக தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,818 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் 11 டொலர்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த டிசெம்பர் மாதத்தில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 107,800 ரூபாவுக்கும் 24 பவுண் தங்கம் ஒரு பவுண் 116,500 ரூபாவுக்கும் விற்பனைச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .