Freelancer / 2023 மார்ச் 03 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 05) வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
இதன்படி, நாளை கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய இடங்களிலும், கடுவெல நகரம், கொலன்னாவ நகர சபைப் பகுதியிலும், வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை பகுதிகளிலும் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மாளிகாகந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாயின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. R
12 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
33 minute ago
1 hours ago