2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

கொழும்பு 7, சமிட் தொடர்மனையை தகர்க்க அனுமதி கோரப்பட்டுள்ளது

Freelancer   / 2021 ஜூன் 07 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 7, கெப்பெட்டிபொல மாவத்தையில் அமைந்துள்ள சுமார் அரை நூற்றாண்டு காலம் பழமையான சமிட் தொடர்மனையை தகர்ப்பதற்கு அமைச்சரவை அனுமதியை நகர அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

இந்தப் பகுதியில், 500 ஊழியர்களுக்கான தங்குமிட தொடர்மனையை நிர்மாணிப்பதற்கும், 10 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தித் திட்டத்துக்கு வழங்குவதற்கும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

மொத்த காணியின் அளவு 14 ஏக்கர்கள் என்பதுடன், இதில் 2 ஏக்கர் பகுதியில் தொடர்மனை நிர்மாணிக்கப்படவுள்ளது. எஞ்சிய ஒன்றறை ஏக்கர் பகுதியில் விளையாட்டுத்திடல் அடங்கலான பொது வசதிகள் உள்ளடக்கப்படவுள்ளன.

“இந்த தொடர்மனைத் தொகுதி நிர்மாணிப்புக்கு அரசாங்கம் 12 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யும்” என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

“எஞ்சிய 10 ஏக்கர் காணிப்பகுதி, அரச தனியார் பங்காண்மையின் கீழ் கலப்பு அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு வழங்கப்படும்” என மேலும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே காணப்படும் கட்டடங்கள் சுமார் 50 வருடங்கள் பழமையானவை என்பதுடன், விரைவில் அவை மாற்றீடு செய்யப்பட வேண்டுமென தெரிவித்த அவர், புதிய தொடர்மனைத் தொகுதியின் நிர்மாணப் பகுதிகள் மூன்றாண்டுகளினுள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .