2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கழுகுப் பார்வைக்குள் சிக்கியது மேல் மாகாணம்

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, முகக்கவசங்களை முறையாக அணியாதவர்களை கைது செய்வதற்காக, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணத்தில் கூடுதலான எண்ணிக்கையானோர் முகக்கவசங்களை அணிவதில்லை ​என புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை கொடுத்துள்ளனர். இதனையடு​த்தே, அவ்வாறானவர்களை கைது செய்வதற்காக, விசேட பொலிஸ் குழுகள் களமிறக்கப்பட்டுள்ளன.

தனி நபர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 30 பொலிஸ் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .