2022 ஜனவரி 22, சனிக்கிழமை

வீடு திரும்பினார் மனோ

Editorial   / 2021 நவம்பர் 24 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று (24) வீடு திரும்பினார்.

ஊடகங்களுக்கு இது பற்றி கருத்து கூறிய மனோ எம்.பி,

 “சுகவீனமுற்ற வேளையில் எனக்கு ஆறுதல்களையும், ஆலோசனைகளையும்  தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், ஊடகங்கள், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X