2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் ரயில்கள் மோதியதில் 40 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பாகிஸ்தான் நகரமான தர்கிக்கு அருகியில் ரயில் மோதல் ஒன்றில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 120க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிதைவுகளுக்குள் சிக்கிய தப்பித்தவர்களை கண்டுபிடிக்க மீட்புப் பணி இச்செய்தி அச்சுக்கு போகும் வரையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

பாகிஸ்தானின் பாரிய நகரான கராச்சிக்கு வடக்காக 440 கிலோ மீற்றர் தூரத்தில் நேற்றுக் காலையே குறித்த மோதல் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலின் எட்டுப் பெட்டிகள் தடம் புரண்ட நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவித்த உள்ளூர் அதிகாரி ரஸாக் மின்ஹாஸ், தடம் புரண்ட இப்பெட்டிகளை தெற்கு நோக்கிச் சென்ற சிர் சைட் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மோதியிருந்ததாகக் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .