2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

துருக்கியில் பாரிய பூமியதிர்ச்சி;57 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 மார்ச் 09 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்ச்சியில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள இலாசிக் மாகாணத்தின் கோவன்சினர் மாவட்டத்தில்  நேற்றுக் காலை இந்த பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் எனவும், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .