2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணிப் பெண்ணைக் கடித்துக் குதறிய கரடி (வீடியோ)

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கர்ப்பிணிப் பெண்ணைக்  கரடியொன்று கடித்துக் குதறும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஷ்யாவில் நடைபெற்ற  சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றிலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சர்க்கஸ் நிறுவனமொன்றில் பயிற்சியாளரான பணிபுரியும் குறித்த  கர்ப்பிணிப் பெண்ணினது கட்டளைகளுக்கு அமைவாக செயற்படும்  குறித்த கரடி சம்பவ தினத்தன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உடனடியாகச் செயற்பட்ட ஏனைய ஊழியர்கள் அக்கரடியிடம் இருந்து குறித்த பெண்ணைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஆச்சரியப்படும் வகையில் அப்பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை எனவும்  அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அக் கரடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .