2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

மியன்மாரில் இராணுவ விமானம் வீழ்ந்தது

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு அருகில் இராணுவ விமானம் ஒன்று இன்று வீழ்ந்து 12 பேர் கொல்லப்பட்டதாக, சமூக வலைத் தளப் பதிவு ஒன்றில் அந்நகர தீயணைப்புச் சேவை தெரிவித்துள்ளது.

மியன்மார் தலைநகர் நகிபிடாவிலிருந்து பைன் ஓ லுவின் நகரத்துக்கு விமானம் சென்றிருந்ததுடன், விழ முன்னர் தரையிறங்க வந்திருந்ததாக, மியன்மார் இராணுவத்தின் மையவட்டி தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறு இராணுவத்தினரும், பிக்குகளும் குறித்த விமானத்தில் காணப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விமானியும், தப்பித்த பயணி ஒருவரும் இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .