Shanmugan Murugavel / 2021 ஜூன் 22 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகெங்கிலும் வெவ்வேறு மோதல்களில் கடந்தாண்டு 8,500க்கும் அதிகமான சிறுவர்கள், படைவீரர்களாக பயன்படுத்தப்பட்டதாகவும், ஏறத்தாழ 2,700 பேர் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் நேற்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கான ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான வருடாந்த அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
21 மோதல்களில் 19,379 சிறுவர்களுக்கு எதிராக சிறுவர் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்தாண்டில் பல மீறல்கள் சோமாலியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா, யேமனிலேயே புரியப்பட்டுள்ளன.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025