2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஸ்பெய்னில் டுபாய் இளவரசி லத்தீஃபா?

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 22 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளரின் மகளான இளவரசி லத்தீஃபாவைக் காண்பிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அண்மைய மாதங்களில் அரிதாகவே லத்தீஃபா காணப்படுகின்றார் அல்லது கேட்கப்படுகின்றார்.

ஸ்பெய்னின் தலைநகர் மட்ரிட்டிலுள்ள விமான நிலையத்தில் நண்பி ஒருவருடன் லத்தீஃபாவைக் காண்பிக்கும் புகைப்படமே இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் லத்தீஃபா மாளிகை ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றும் உயிருக்கு அஞ்சியவாறு இருக்கும் காணொளி ஒன்றை பிரித்தானிய ஓளிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி) ஒளிபரப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .