Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓர் இரகசிய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு வழமைக்கு மாறான முறையில் ஷின்ஜியாங் ஏஐ பொலிஸை வழிநடத்துவதாக ஓர் அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.
பீஜிங்கின் அரசியல் கட்டமைப்பை மேற்கு பிராந்தியத்துக்கு வெளிப்படுத்தப்போவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரசியல் மற்றும் சட்டவிவகார ஆணையம் சிறுபான்மை அறிக்கை அமைப்பை நிர்வகிக்கிறது. இது மில்லியன் கணக்கிலான உய்குர் இன மக்களிடம் விசாரணைகளைத் தூண்டுவதற்கு சனத்தொகை கணக்கு சேகரிப்பை பயன்படுத்தியதாக அமெரிக்க ஆதரவு ஆராய்ச்சி நிறுவனமான அவுஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் அறிவித்தது.
ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி உய்குர் இன முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர் ஓரு மில்லியன் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷின்ஜியாங்கில் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அடக்குமுறைக்கு அதிகாரம் அளிக்கும் நிர்வாக அமைப்புகளை இந்த அறிக்கை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
இந்த மனித உரிமை நெருக்கடியால் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கனடா ஆகிய நாடுகள் சீனாவை இனப்படுகொலை நாடு என்று குற்றம் சாட்டின.
இதற்கு பதில் அளித்த சீனா இங்குள்ள முகாம்கள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வழங்குபவை. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான மத்திய நிலையங்கள், வறுமை ஒழிப்பு என்பவற்றுக்கானவையாகும். இனவழிப்பு என்பது இந்த நூற்றாண்டின் மிக்பெரிய பொய் என்று கூறியது.
சீன வெளியுறவு அமைச்சு செய்தித்தொடர்பாளர் வோங் வென்பின், ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசுகையில் “அதன் ஆதரவாளர்களின் நலன்களுக்கு சேவை செய்ய தவறான தகவல்களையும் பொய்களையும் கூறுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
எழுச்சிக்கான காற்றழுத்தமானி இந்த அறிக்கையானது முந்தைய அசரசியல் பிரசாரத்தில் அதன் பங்கிற்கு ஏற்பானதாகும். அரசியல் எழுச்சிக்கான ஒரு காற்றழுத்தமானி என்றும் கூறலாம் என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பீஜிங் மக்கள் படித்துப் பட்டதாரிகளாகும்போது முகாம்களை மூடுவதைக்கூட அண்மைய அசோசியேட்டட் பிரஸ் அறிக்கைகள் விமர்சித்துள்ளன. கம்பி வேலி, கவச இராணுவ வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு கெமரா கோபுரங்கள் என்பவற்றைக் குறைப்பதாக அவை குறிப்பிட்டுள்ளன என்று சீனா கூறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago