2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பதவியேற்ற சிலமணி நேரங்களிலேயே இராஜினாமா

Ilango Bharathy   / 2021 நவம்பர் 26 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்வீடனில்  முதல் பெண் பிரதமராகக் கடந்த 24 ஆம் திகதி  தெரிவு செய்யப்பட்ட மக்டலேனா அண்டா்சன், பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பதவி விலகிய சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சுவீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியடையவே அவருக்கு பதிலாக, கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்டலேனா அண்டா்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரைப் பிரதமராகத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

குறித்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மக்டலேனா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் சுவீடன் நாடாளுமன்றத்தில் மாக்டெலனா அண்டர்சன் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தை கூட்டணி கட்சியான கிரீன்ஸ் பார்ட்டி வலது சாரி கொள்கைகள் உடைய எதிர்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சியுடன் இணைந்து நிராகரித்தது.

இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த மாக்டெலனா ஒற்றை தலைமை கொண்ட ஆட்சியை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

பிரதமரின் விலகல் முடிவை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என சபாநாயகர் Andreas Norlen தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X