2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

புதிய கொரோனா பரவுவதாக சீனா அறிவித்தது

Editorial   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஜிங்:

சீனாவின் தென்கிழக்கு பியூஜியன் மாகாணத்தில் புதிதாக 20 கொரோனா வைரஸ் பரவல்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் (NHC) தெரிவித்தது.

அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  பியூஜியனில் 20 உள்நாட்டு தொற்றுக்கள், புட்டியானில் 19 மற்றும் குவான்ஸூவில் ஒன்று என நோய் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவில் மொத்தமாக 46 புதிய கொரோனா வைரஸ் நோய்ப் பரவல்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுவரை மொத்தமாக உறுதிசெய்யப்பட்ட 95,199 நோயாளர்கள் பற்றியும்  4, 636 மரணங்கள் பற்றியும் தேசிய சுகாதார ஆணையத்துக்கு அறிக்கைகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை 11 இலட்சத்து 70 ஆயிரத்து 339 பேர் பாதிக்கப்பட்ட நோயாளர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 140 பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் ஆணையம் கூறியது.

பாதிக்கப்பட்ட நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த கிட்டத்தட்ட 883பேர் மருத்துவ கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக பெரும்பாலான உறுதி செய்யப்பட்ட பரவல்கள் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் மூலமாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சீனா கருதுகிறது. ஆனால் ஜூலை மாத மத்தியில் நான்ஜிங்கில் ஏற்பட்ட பரவல் வேறு பல நகரங்களுக்கும் பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X