2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரவு நேரங்களில் விளக்குகள் எரியக்கூடாது

Ilango Bharathy   / 2021 நவம்பர் 15 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இரவு நேரங்களில் (நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை) விளக்குகள் எரியக் கூடாது" என்ற புதிய சட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சட்டத்தின் மூலம் Co2-உமிழ்வு குறைக்கப்படுவதோடு, மின்சார சேமிப்பு மற்றும் இரவு நேர மாசுபாடு குறைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டத்திற்கு ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது அண்மையில் ,அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்  தீயணைப்பு துறைகள், சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்கள் மற்றும் அவசரகால மருத்துவ சேவைகள் போன்ற பகுதிகளில் இரவு சமயங்களில் விளக்குகள் எரியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .