Editorial / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீஜிங் (சீனா):
மனித உரிமைகள் பதிவு காரணமாக 2022 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதில் சீனா பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. முக்கியமாக ஷின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பேசுபொருளாக இருப்பதாக கனடாவைத் தளமாகக்கொண்ட சிந்தனைத் தொட்டி ஒன்றின்மூலம் தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக்குக்கான தீபம் கிரேக்கத்தில் உத்தியோக பூர்வமாக ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபம் அடுத்த பெப்ரவரியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக இம்மாத இறுதியில் சீன தலைநகரைச் சென்றடையுமென்று உரிமை மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் (ஐஎஃப்எஃப்ஆர்ஏஎஸ்)தெரிவித்தது.
கிரேக்கத்தில் உள்ள புராதன ஒலிம்பியாவில் ஒக்டோபர் 18ஆம் திகதியன்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டபோது அருகில் மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்பகுதிக்குள் வரவிடாமல் தடுத்தனர். சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
அதற்கு முந்தைய நாள் திபேத்துக்கும், ஹொங்கொங்கிற்கும் சுதந்திரம் என்னும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியமைக்காக இரண்டுபேரை போலீஸார் கைது செய்ததாக சிந்தனைத்தொட்டி மேலும் தெரிவித்தது.
ஷின்ஜியாங்கில் உய்குர் இன முஸ்லிம்கள்மீது நடத்தப்படும் கடும்போக்கு நடவடிக்கைகள், தடுப்பு முகாம்களுக்கு அனுப்புதல், அவர்களின் சமய நடவடிக்கைகளில் தலையிடுதல் மற்றும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல் உட்பட துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்காக சீனா உலக அளவில் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. ஆனாலும் சீன அதிகாரிகள் இவற்றை தொடர்ந்தும் மறுத்தே வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் விiளாட்டுக்களை புறக்கணிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புக்களின் அழைப்பை தீவிரமாக ஆதரிக்கின்றன என்று உரிமை மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் (ஐஎஃப்எஃப்ஆர்ஏஎஸ்)தெரிவித்தது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஷின்ஜியாங்கில் சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என்று அறிவித்த முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. பெப்ரவரியில் கனேடிய மற்றும் நெதர்லாந்து பாராளுமன்றங்கள் உய்குர் நெருக்கடியை இனப்படுகொலை என்று அங்கீகரிக்கும் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டன. பின்னர் ஐரோப்பாவும் அதனைச் செய்தது. ஏப்ரலில் இங்கிலாந்தும் இதனையே அறிவித்தது. இப்படி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் சீனா பெரும் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்து வருகிறது.
13 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago