2023 ஜூன் 01, வியாழக்கிழமை

நான் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன்”- ஆடையற்ற நபரால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 19 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நபர் ஒருவர் நிர்வாணமாக நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வெஸ்ட் பாம் பீச் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரான ஜேசன் ஸ்மித் என்ற நபரே கடந்த 8 ஆம் திகதி வொர்த் அவென்யூ என்ற பகுதியில், இவ்வாறு ஆடைகளின்றி நடமாடியுள்ளார்.

 இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 இதன் போது அவர்”  நான் வேற்று பூமியை சேர்ந்தவன் என்றும் தான் வெஸ்ட் பாம் பீச் பகுதியில் வசித்து வருவதாகவும், எனது உடைகள் எங்கே போனது எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரைக்  கைது செய்த பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .