2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஒன்றரை வருடமாக சிறுநீர் வரவில்லை; தவிக்கும் பெண்

Ilango Bharathy   / 2023 மார்ச் 27 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாத்   தவித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் வசித்து வரும்  எல்லே ஆடம்ஸ் என்ற 30 வயதான பெண்ணே  இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த , 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம் ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறு நாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால், அன்றய தினம் அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை.

பதற்றமடைந்த அவர்  அதிகளவிளான நீர் மற்றும் நீர் ஆகாரங்களைப் பருகியுள்ளார்.  அப்படி இருந்தும் அவரால் அன்று சிறுநீர் கழிக்க முடியவில்லை. இதனால்  மருத்துமனைக்கு சென்று தனது பிரச்சனையை கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லீற்றர் சிறுநீர் தேங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு பெண்ணால் 500 மில்லி லீற்றர் சிறுநீரையும், ஆணால் 700 மில்லி லீற்றர்  சிறுநீரையும்  தான் அடக்கி வைக்க முடியும். ஆனால், இவருக்கு ஒரு லீற்றர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவர்கள்  சிறிய குழாய் ஒன்றினைச் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றியுள்ளனர். மேலும்  ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது யோகா செய்து நன்கு தூங்குங்கள் பிரச்சனை சரியாகி விடும் என பெண்ணிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. அன்று தொடங்கி ஒவ்வொரு முறையும் செயற்கை முறையில் தான் சிறுநீரை வெளியேற்றி வருகிறார். இப்படியே ஓராண்டு கழிந்த நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு Fowler's syndrome என்ற அரிய வகை நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அரிய நோய் கொண்டவர்களால் சிறுநீர் பை நிரம்பினாலும் இயற்கையாக சிறுநீர் கழிக்க முடியாது, குறிப்பாக இளம் பெண்களுக்கு தான் இந்த அரிய நோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நோய்க்கான உரிய காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட எல்லே ஆடம்ஸ்  கடந்த ஒன்றரை வருடமாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வந்துள்ளார்.

பின்னர் இவருக்கு catheter என்ற சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X