2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

ஹொங் கொங் ஆர்ப்பாட்டக்காரர் சுடப்பட்டார்

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட கலகமொன்றின்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஹொங் கொங் பொலிஸார், குறைந்தது ஒரு ஆர்ப்பாட்டக்காரரை இன்று காயப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் முடக்கப்பட்ட வீதிச் சந்தியொன்றில் முகமூடி அணிந்த நபரொருவரை கிழக்கு மாவட்டமான சை வான் ஹோவில் கைது செய்ய முற்படும்போது தனது ஆயுதத்தை பொலிஸ் அதிகாரி எடுப்பதை காணொளி காண்பிக்கின்றது.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரியை பின்னர் நெருங்கிய இன்னொரு முகமூடியணிந்த நபரொருவரும் நெஞ்சில் சூடு வாங்கி தனது இடது பக்கத்தைப் பிடித்தபடி தரையில் விழுவது காணொளியில் புலனாகின்றது.

அந்தவகையில், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்குறித்த சம்பவம் இடம்பெற்று சில செக்கன்களின் பின்னர் முரண்பாடொன்றின்போது மேலும் இரண்டு தடவைகள் குறித்த பொலிஸ் அதிகாரியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இன்னொரு முகமூடியணிந்த நபர் தரையில் வீழ்ந்தது காணொளியில் புலப்பட்டிருந்தது.

இந்நிலையில், காணொளி தெளிவில்லாமல் இருந்தமையால் குறித்த நபர் சூடு வாங்கினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .