2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

தாடியில் லேடி; இணையத்தில் வைரலாகும் பெண்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின், லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த பெண்ணொருவர்  சுமார் 17 வருடங்களாக முகத்தில் தாடியுடன் வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டகோடா  கோக் ( Dakota cooke)என்ற 30 வயதான பெண்ணே சுமார்  17 வருடங்களாக இப் பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றார்.

டகோடா  தனது 13 ஆவது வயது முதல், முகத்தில் அசாதாரணமாக முடி வளர்வதைக்  கவனித்துள்ளார் .இதனால் சுமார் பத்து வருடங்களாக மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.

இது குறித்து டகோடா கருத்துத் தெரிவிக்கையில் ”நான் வளர்ந்த காலத்தில், பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது.

இதனால் நான் சலூன்களுக்கு சவரம் செய்யச்  சென்றால், பெண்கள் அங்கு வரக்கூடாது என்றும், பெண்கள் முகத்தில் முடி வளர்த்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுரை கூறுவார்கள்”இதனால்  ஒரு நாளைக்கு இரு முறை சவரம் செய்துகொள்ள தொடங்கினேன்.அத்துடன்  இதனால், முகத்தில் ஏற்படும் காயங்களை மறைக்க  மேக் அப்  செய்துகொள்வேன்.

இதுகுறித்து நான் மருத்துவர்களை  நாடிய போது  அவர்கள் ‘எனது உடலில் அட்ரீனல் சுரப்பிகள் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்‘ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டும்  தாடியுடன் ஒரு நிகழ்ச்சியில் தோன்றினேன். அதன் பின்னர் சவரம் செய்து கொள்வதையும், வேக்சிங் செய்து கொள்வதையும் படிப்படியாக கைவிட்டுவிட்டேன்.

 ஒரு கட்டத்தில் தனது இந்த நிலையை மனதார ஏற்றுக்கொள்ளவும் தொடங்கிவிட்டேன். இதற்குஎனது ”குடும்பத்தினரும், நண்பர்களும் ஆறுதலாக நின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .