2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

முதல் முறை திருமணம் செய்த முதியவர்? எத்தனையாவது வயதில் தெரியுமா?

Ilango Bharathy   / 2022 மே 26 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
தனது 95 ஆவது வயதில் முதியவர் ஒருவர் முதல் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜூலியன் மோயிலே (Julian Moyle) என்பவரே, வலேரி வில்லியம்ஸ் என்ற  84 வயதான மூதாட்டியை இவ்வாறு  திருமணம் செய்துள்ளார்.
 
ஜூலியன் மோயிலே கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர்    தேவாலயம் ஒன்றில் சந்தித்துள்ள நிலை அண்மையில் குறித்த தேவாலயத்தில் வைத்தே  இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த திருமண நிகழ்வில், ஜூலியன் மற்றும் வலேரி சார்பில் சுமார் 40 பேர் வரை கலந்து கொண்டனர் எனவும் இந்த ஜோடி தங்களின் தேன்நிலவுக்கு அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .