Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீங்கு விளைவிக்கும் செயலிகளால்(Apps) 10 லட்சம் பயனாளர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மெட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அப்பிள் மற்றும் கூகுள் செயலிகள் மையத்தில் சுமார் 402 தீங்கு விளைவிக்கும் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் 355 அண்டரெய்ட் தளங்களிலும், 47 ஐ.ஓ.எஸ். தளங்களிலும் இயங்க கூடியவை . அத்துடன் இவை பயனாளர்களிடம் மோசடி செய்வதற்கென பல தந்திரங்களைக் கையாண்டு வருகின்றன.
குறிப்பாக போலியான விமர்சனங்கள் மற்றும் வாக்குறுதிகளை அளித்து, அவற்றை மக்கள் பதிவிறக்கம் செய்ய தூண்டுகின்றன. இதனால், பயனாளர்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுகின்றன.
மேலும் சில செயலிகளின் பதிவிறக்கத்தின்போது, பேஸ்புக் வழியே லாக்இன் செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுகின்றது.
அவ்வாறு செய்யும் போதும் பயனாளர்களின் விபரங்கள் களவாடப்படுகின்ற வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
எனவே பயனாளர்கள் தமது தனிப்பட்ட விபரங்களைப் பகிரும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago