Ilango Bharathy / 2021 நவம்பர் 26 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
83 வயதான மூதாட்டியொருவர் 19 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர்பிழைத்த சம்பவம் சீனாவில் இடம் பெற்றுள்ளது.
சீனாவில் யாங்சூவில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வரும் குறித்த மூதாட்டி சம்பவ தினத்தன்று பல்கனியில் ஆடைகளை உலரவைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதன்போது எதிர்பாராத விதமாக பல்கனியில் இருந்து தவறி விழுந்த அவர் 17 ஆவது மாடியில் இருந்த துணிகள் உலரவைக்கப்படும் கயிற்றில் மாட்டிக் கொண்டார்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள், மூதாட்டியை காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோவொன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 Jan 2026