2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

ஜப்பானில் மீண்டும் பாரிய பூகம்பம்

Super User   / 2011 ஏப்ரல் 07 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜப்பானில் சற்று முன்னர் 7.4 ரிச்டர் அளவுடைய பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.  அதையடுத்து ஜப்பானின் வடபகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒருமீற்றர் உயரமான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மியாகி பிராந்தியத்தில் கடலுக்கடியில் 25 மீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூகம்பத்தினால் தலைநகர் டோக்கியோவிலுள்ள கட்டிடங்களும் அதிர்ந்தன.

கடந்த மாதம் 9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினாலும் அதைத் தொடர்ந்த சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலேயே இன்றைய பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பூகம்பத்தையடுத்து புகுஷிமா தாய்ச்சி அணு உலையிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .