2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (03.11.2013 - 09.11.2013)

A.P.Mathan   / 2013 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (03.11.2013 - 09.11.2013)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
தன்னை சார்ந்தவர்களுடன் ஒழிவு மறைவின்றி பழகும் வெண்மையான உள்ளம் கொண்ட மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் ஏற்றம் தரும் வகையில் வருமானம் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் காணப்படும். உறவினர்களிடத்தில் அன்யோன்யம் காணப்படும். உணவு விடயத்தில் கட்டுப்பாடு தேவை. தகுந்த ஓய்வும் தேவை. வார இறுதியில் சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் எதிர்ப்பைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். குழப்பங்கள் தோன்றி மறையும். எனவே இந்த வாரம் உங்களுக்கு சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 06
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
சந்திராஷ்டமம்:
நவம்பர் 04ஆம் திகதி மாலை 03.37 மணியிலிருந்து நவம்பர் 06ஆம் திகதி மாலை 05.14 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் வாழ்வில் வெற்றியை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு உபாதைகள் காணப்படும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. ஆனாலும் பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவுகள் அதிகம் காணப்படும். பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்கள் கூடி வரும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். வார இறுதி மிகவும் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
சந்திராஷ்டமம்:
நவம்பர் 06ஆம் திகதி மாலை 05.14 மணியிலிருந்து நவம்பர் 08ஆம் திகதி மாலை 06.51 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
வலிமையான உள்ளமும் செயல்களில் சுறுசுறுப்பும் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தில் அதிக அளவில் லாபங்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். முன்னேற்றம் கிடைக்கும். சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும். இருந்த போதிலும் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும்.  இந்தவாரம் தொடக்கம் முதல் இறுதி வரை மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
சந்திராஷ்டமம்:
நவம்பர் 08ஆம் திகதி மாலை 6.51 மணியிலிருந்து நவம்பர் 10ஆம் திகதி மாலை 09.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
மென்மையான சுபாவமும் எல்லோருடனும் எளிமையாக பழகும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரத்தில் அலைச்சல்களால் வீண் மனசங்கடங்கள் உண்டாகும். பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். கடினமான பேச்சுவார்த்தைகள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். சோம்பல்களால் தேவையில்லாத காலதாமதம் உண்டாகலாம். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் தோன்றும். எனவே வாரம் முழுவதும் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
யாருக்காகவும் தனது கொள்கைகளை விட்டுகொடுக்காது பயமற்ற பேச்சும் செயலும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறும். உடன் பிறந்தவர்கள் மூலம் மசிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆலய தரிசனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும்  செலவுகள் அதிகரிக்கும். ஆனாலும் தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக்கொடுக்கும். பெண்களுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வீர்கள். ஆரோக்கியக் குறைவால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகலாம். வார இறுதியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தான் செய்யும் எந்த காரியத்திலும் வாய்மையும் முன்னுரிமையும் பெற எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். மிகவும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். வெளியூர் பிரயாணங்கள் ஓரளவு சாதகமாக அமையும். தீயவர்களின் நட்பினை தவிர்ப்பது நல்லது. சிலவிதமான சங்கடங்கள் ஏற்படலாம். எனவே வார இறுதியில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள். 
 
தேடிச் சென்று உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழு மூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்களுக்கு பெருமைகள் தேடி வரும். காரியங்கள் வெற்றியடையும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். திடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். வேலையில் சில சிரமங்கள் காணப்படும். நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது.  உடலில் அசௌகர்யம் தென்படலாம். மருத்துவ ஆலோசனை தேவை. பணி சுமைக்கு ஆளாக நேரிடும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் அவசியம். காரியங்கள் தடைப்படுதல், சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும். இருந்த போதிலும் வார இறுதியில் குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் சில மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வியாபாரம் விருத்தியடையும். பணத் தட்டுப்பாடுகள் இருக்காது. குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள்  உண்டாகும். சக பணியாளர்கள் மத்தியில் சுமூகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். வாகன யோகங்கள் உண்டாகும். இடமாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த வாரம் மிக மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணிமாற்றங்கள் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரம் இன்றி வாழ விரும்பும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நவீன உக்திகளால் புதிய ஆதரவைப் பெறுவீர்கள். ஏற்றம் தரும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். கடின உழைப்பின் மூலம் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். விளையாட்டுக்களினால் உடல் சோர்வு உண்டாகும். வார இறுதியில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும். முயற்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். எதிர்பார்த்த செய்திகள் தோல்வியில் முடியும். மனசங்கடங்கள் உண்டாகும். இந்த வாரம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே காணப்படுகின்றன.
 
அதிர்ஷ்ட திகதி : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)
 
 
 
மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தனக்கென்று மட்டும் எண்ணாது பிறரின் நலனுக்காக செயல்படும் பரந்த உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் மனம் அமைதியை விரும்பும். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். பணியிடத்தில் செல்;வாக்கு கூடும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறலாம். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும். காரியத்தில் வெற்றிகள்  உண்டாகும். வார இறுதியில் பேச்சு, செயலில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். பணியாளர்கள் திடீர் பணி சுமையால் துன்பத்திற்கு ஆளாவீர்கள். வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)
 
சந்திராஷ்டமம்:
நவம்பர் 02ஆம் திகதி காலை 12.34 மணியிலிருந்து நவம்பர் 04ஆம் திகதி மாலை 03.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X