2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (22.06.2014 - 28.06.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இந்தவார பலன்கள் (22.06.2014 - 28.06.2014)
 
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
மாற்றுத் திட்டம் பின்பற்றி அதிக நன்மை பெறும் மேட ராசி அன்பர்களே..‘
 
இந்த வாரம் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.  அலுவலகத்தில் உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குழப்பங்கள் மறைந்து தெளிவான சிந்தனை உருவாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்கள் நிலை உயரும். வளர்ச்சிப் பாதைக்கான வழி திறக்கும். எதிரிகளால் உண்டான தொல்லை விலகும். மனதில்  நம்பிக்கை துணிச்சல் கூடும். பொது நலக்காரியங்களில் ஈடுபாடு அதிகம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. புதியவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் ஓடோடி வந்து உதவுவார்கள். பொதுவாகவே இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 22
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
இடபம் 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
அடுத்தவர் தரும் உதவியை அளவுடன் ஏற்கும் இடப ராசி அன்பர்களே..‘
 
இந்த வாரம் தொடக்கத்தில்  பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டு. உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். குழப்பங்களால் ஏற்பட்ட கவலைகள் குறையும். அலைச்சல் வீண் போகாது.  இருந்த போதிலும் புதிய சொத்துக்கள் சேரும். எந்த காரியத்திலும் நிதானம் தேவை. கடன்  சுமை குறையும். உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். பயணத்தினால் சிரமம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும். பணியிடத்தில் மதிப்பு மரியாதை உயரும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பணவரவு கைகூடும். இந்த வாரம் இரண்டும் கலந்த பலன்களே காணப்படுகின்றன. 
 
அதிர்ஷ்ட திகதி :  26 
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
தன்னிடம் பழகுபவர்களுக்கு உரிய மரியாதை தரும்  மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம்  உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வங்கி வகைகளில் ஆதாயம் கிடைக்கும். வரவு கூடும். அனுபவத்தினால் நன்மை உண்டாகும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். எண்ணம் ஒன்று சிறப்பாக ஈடேறும்.தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி சவாலான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் ஆகியவை  பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆனாலும் திடீர் பயணத்தால் அலைச்சல். நண்பர்கள் உறவினர்களால் சிறு சங்கடம் ஆகியவை ஏற்படும். எனவே எந்த காரியத்திலும் கவனம் பொறுமை அவசியம். 
 
அதிர்ஷ்ட திகதி :  27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு 
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
 
 
கடகம் 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
 
பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும்.பொதுக்காரியங்களில் விருப்பம் அதிகம் உண்டாகும்.  பேச்சாற்றல் வெளிப்படும். நீண்ட கால கோரிக்கை நிறைவேறும். தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். நீர் பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும். ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்க்கவும். மனைவியிடத்தில் கூடுதல் கவனம் தேவை. எவருக்காகவும் பொறுப்பேற்கக் கூடாது. அலுவலகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உடன் பிறந்தவர்களின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். இந்த வாரம் உங்களுக்கு மகிழச்சியாகவே செல்லும்
 
அதிர்ஷ்ட திகதி : 26 
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் பணவரவு கூடும். துணிச்சலாலும் அசாத்திய காரியத்தினாலும் எதிரிகள் விலகி நிற்பார்கள். போட்டி மற்றும் பந்தயங்களில் வெற்றி உண்டாகும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். யாரிடமும் வீண் வம்பு வேண்டாம். பெரியவர்களின் ஆசி, பாராட்டு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. அரசு வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்
 
 
 
கன்னி 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
குடும்ப உறுப்பினர்களிடம் கூடுதல் பாசம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம். உடல் நலத்தில் கவனம் தேவைப்படும். யாருடனும் வீண் வம்பு வேண்டாம். உடன் பிறந்தவர்களால்; முக்கிய தகவல் வரும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பொது இடங்களில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். பயணத்தின் பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் தேவையில்லாதவற்றை சொல்லி குழப்பம் விளைவிப்பார்கள். எனவே அடுத்தவர் சொல்வதை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம் 
 
அதிர்ஷ்ட திகதி :  23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.
 
நடை, உடை, செயலில் வசீகரம் நிறைந்த துலா ராசி அன்பர்களே..!
     
இந்த வாரம் தொடக்கத்தில்  பயணத்தை தள்ளிப்போடுவது நலம். குழப்பங்களால் மனதில் நிம்மதி குறையும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். இருந்த போதிலும்  முக்கியமான எண்ணம் நண்பரின் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். எதிர்ப்புக்கள் குறையும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசுப் பணிகள் நிறைவேறும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பேச்சில் பொறுமை அவசியம். 
குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைந்திடும். பெண்கள்  பிரச்சனைகளால் மனம் தளர வேண்டாம். பேச்சி;ல் நிதானம் தேவை. புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும். அதிஷ்ட வாய்ப்புக்கள் கூடி வரும். 
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள் 
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
விருட்ச்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
 
தகுதி மீறிய வாக்குறுதியை தவிர்த்திடும் விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் உடன் பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். வீடு வாகனம் என புதிய பொருட்கள் சேரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். நல்ல வாய்ப்புக்கள் கூடி வரும். பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிலும் முமுமையான கவனம் தேவை. தொழிலில் உற்பத்தி அளவான விற்பனை இருக்கும். படிப்பு சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.  தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எதிர்பார்க்கும் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நன்மை உண்டாகும். 
 
அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்
 
 
 
தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
 
வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் உள்ள தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழிலில்  மாற்றம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அசதி அதிகமாகும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்காமல் தவிப்பீர்கள். பெற்றோர்களின் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும். ஆனாலும் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் வளர்ச்சி பெறும். வசதிக்கு ஏற்ப பொருட்களை வாங்குவீர்கள்.  பொது நலக்காரியங்களில் ஆர்வம் அதிகம் காணப்படும். தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். இந்த வாரம் மகிழ்;ச்சியாகவே செல்லும். 
 
அதிர்ஷ்ட திகதி : 22 
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
மகரம் 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
கருணை மனதுடன் உதவுகிற மகர ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனை விலகும். தொலை தூரப் பயணத்தின் போது பாதுகாப்பு  தேவை. பெற்றோர் நலனில் அக்கறை தேவை. இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். பொறுமை நிதானம் அவசியம். மனதில் நம்பிக்கை துணிச்சல் அதிகரிக்கும். போட்டிகள் உண்டாகும் தொழிலில் வருகின்ற இடையூறுகளைத் தவிர்ப்பது நல்லது. சேமிப்பு பணம் உதவிகரமாக இருக்கும் குடும்பத்தில் சிறு சலசலப்புக்கள் உண்டாகும். மின் சாதனங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். 
 
அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்
 
 
 
கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
 
பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு அதிக நன்மை பெறும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்த வாரம் தொடக்கத்தில் எந்த  காரியத்திலும் பதற்றம் கூடாது. வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். வெளியாட்களை நம்ப வேண்டாம்.  ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் தேவை. பணவரவு கூடும். குடும்பத்தில் நற்காரியம் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பழைய நட்புக்கள் மலரும். பயணங்களினால் அலைச்சல் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலம் நன்மை உண்டாகும். எதிலும் அவசரம் கூடாது. முக்கிய காரியங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறும். இந்த வாரம் மகிழ்ச்சியாகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, இளம் சாம்பல் 
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்) 
 
 
 
மீனம் 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.
 
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணி நிறைவேற்றும் மீன ராசி அன்பர்களே..!
   
இந்தவாரம் நண்பர்கள் உறவினர்கள் தக்க  சமயத்தில் உதவி புரிவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் நம்பிக்கை துணிச்சல் கூடும்.சில செலவுகளால் தாமதம் உண்டாகும்.  கேட்ட இடத்தில் கடனுதவிகள் வந்து சேரும். பிறர்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பு பணம் உதவிகரமாக இருக்கும். பொறுமை குணம் மிக அவசியம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பேச்சு மற்றும் செயலில் நிதானம் தேவை. அனுசரித்து செல்ல வேண்டியது அவசியமாகும்.  பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. எச்சரிக்கையாக இருப்பது நலம். 
 
அதிர்ஷ்ட திகதி :  28
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .