2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (23.02.2014 - 01.03.2014)

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (23.02.2014 - 01.03.2014)

மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மேட ராசி அன்பா்களே..!

இந்தவாரம் நீங்கள் எதையும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உங்களின் கடின உழைப்பிற்கு பலன் கிட்டும். வீண் செலவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். அரசாங்க விசயங்கள் சாதகமாக முடியும். நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரியின் பிடியிலிருந்து விடுபடுவீர்கள். பணிகளில் உங்களுடைய ஒத்துழைப்பு சிறப்புடையதாக இருக்கும். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிட்டும். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)



இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சாதுர்யமாக செயல்பட்டு சாதனை படைக்கும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உத்தியோகத்தில் அடுத்தடுத்து சவால்களை சந்தித்தாலும் உயர்வு உண்டு. செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர உறவுகளிடையே மனத்தாங்கள் அதிகமாகும். சொத்து பிரச்சினையில் அவசர தீர்மானங்களை எடுக்க வேண்டாம். புதிய கால்நடைகள் வாங்குவதை தற்சமயம் தவிர்க்கவும். எந்த ஒரு சிறு விடயத்தையும் அலட்சியபடுத்தாமல் இருப்பது நல்லது. வாகனத்தினால் யோகம் இந்த வார தொடக்கம் சில சிக்கல்களைக் கொடுத்தாலும் வார இறுதி மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 24ஆம் திகதி காலை 09.08 மணியிலிருந்து பெப்ரவரி 26ஆம் திகதி காலை 10.39 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.



மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் திட்டமிட்டு செயலாற்றும் மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பெண்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படக் கூடும். பழைய கடன் வசூல் ஆகும். ஒருசிலர் புதிய வீடு கட்டுவார்கள். வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். நெருங்கிய உறவினர்கள் நண்பர்களாக இருந்தாலும் அளவுடன் பழகுவது நல்லது. எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பணம் தந்து ஏமாற வேண்டாம். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம்: நவகிரகம்

சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 26ஆம் திகதி காலை 10.39 மணியிலிருந்து பெப்ரவரி 28ஆம் திகதி காலை 10.41 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.



கடகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் ஆரோக்கியம் அழகு கூடும். புது சலுகைகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுதலையடைவீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகமாகும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எல்லா வகையிலும் இலாபத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் அயல் நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் அமையும். இந்தவாரம் உங்களுக்கு மகிழ்சியாகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 26
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்

சந்திராஷ்டமம்:
பெப்ரவரி 28ஆம் திகதி காலை 10.41 மணியிலிருந்து மார்ச் 02ஆம் திகதி காலை 11.08 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.



சிம்மம்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய திட்டங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள். உங்களுடைய திறமையை பின்பற்றி முன்னேறுவதற்கும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒரு சொத்தை விற்று மறு சொத்தை வாங்க வேண்டி வரும். மனைவியின் ஆதரவும் ஆறுதலான வார்த்தையும் உங்களை மேலும் பலப்படுத்தும். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் சிறப்பாக பேசப்படுவீர்கள். வார இறுதியில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் இருந்த நிம்மதியற்ற போக்கு மாறும். இந்தவாரம் உங்களுக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், பட்டுத்துணி
அதிர்ஷ்ட தெய்வம் : குருபகவான்



கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வயதில் குறைந்தவருக்கும் மரியாதை தருகிற கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் அதிகரிக்கும். அவ்வப்போது முன்கோபப்படுவீர்கள். பெரிய நோய்கள் இருப்பதை போன்ற பிரம்மைகள் வந்து நீங்கும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. அனாவசியமாக மற்றவர்களது பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபார விடயங்களில் மிகவும் கவனம் தேவை. வார இறுதியில் மனக்கசப்பால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். ரியல் எஸ்டேட் கட்டுமான வகைகளால் லாபம் உண்டு. இந்தவாரம் சுமாராகவே செல்லும்.

அதிர்ஷ்ட திகதி : 27
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி



துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உடன் பிறந்தவர்களுக்காக பரிந்து பேசுவதால் மனைவியுடன் இடைவெளி அதிகமாகும். இடையிடையே பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டி வரும். பணியிடத்தில் சில மன வேதனைகள் உண்டாகும். கடினமாக உழைத்தால் மட்டுமே பலனை எதிர்பபார்க்க முடியும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது அவசியம். வார இறுதியில் பற்று வரவு கூடும். எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் அமையும். வேற்று மதத்தவர்களால் வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்

அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம் : பார்வதி



விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தாய் வழி உறவினர்களுடன் சிறு சிறு மோதல்கள் வரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் மேற்கொண்டு படித்து உங்களுடைய அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொள்வீர்கள். அதிகாரிகளுடன் இருந்த நிழல் யுத்தம் நீங்கும். ஒரு சிலருக்கு கடன் சுமை கூடும். உயிர் நண்பர்கள் கூட விலகி செல்லும் சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். பிறரின் உதவிகள் எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். தீடீர் பணப் பிரச்சினைகள் உண்டாகும். வார இறுதியில் வியாபாரத்தில் சில வெற்றிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திகதி : 23
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்


தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் பாசமுடன் நடக்கும் தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வது நல்லது. ஓரளவு வருமானம் உயரும். விருந்தினர்களின் இடைவிடாத வருகையால் வீடுகளை கட்டும். மகிழ்ச்சி கூடும். மனைவி வழி உறவினர்கள் மதிக்கும் படி பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி முடிவு எடுக்காமல் நீங்களே நேரிடையாக இறங்கி எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர்கள். பெண்களுக்கு அன்பான சூழ்நிலைகள் உருவாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும். புதிய முயற்சிகள் நிறைவேறும். சொத்து பிரச்சினைகள் தீரும்  மகிழ்ச்சியான வாரம் இது.

அதிர்ஷ்ட திகதி : 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

பிறருக்கு உதவும் மனம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். எந்த விடயத்திலும் நாட்டம் இருக்காது. வீணான மன உழைச்சல்கள் காணப்படும். ஆனாலும் இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும்.  புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சுப விரயச்செலவுகள் அதிகமாகும். கொடுக்கல் - வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சிக்கனமாக வாழ்ந்தால் மட்டுமே புதிய கடன் வராமல் தடுக்க முடியும். கணவன் - மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். சேமிப்பு உயரும். வியாபாரிகளின் லாபம் சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்



கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கொடுத்த - வாக்குறுதியை நிறைவேற்றும் கும்ப ராசி அன்பர்களே...!

இந்தவாரம் நீங்கள் வேலையில் இருந்து கொண்டே பகுதி நேரவியாபாரம் தொடங்கி குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் மதிப்பும் அதிகரிக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய தொடர்புகள் சுற்றத்தினர், நண்பர் வருகை. வியாபாரம்  விருத்தியடையும். இல்லத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அநாவசிய உறுதி மொழிகளைத் தவிர்ப்பது நல்லது. வார இறுதியில் இடையிடையே உடல் சோர்வடையும் நிம்மதி குறையும். தொழில் ஸ்தானத்தில் தேவையற்ற வாக்கு வாதம் தோன்றும். எனவே பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி : 28
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம் : சிவன் (சூரியன்)



மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

வெளிப்படையாக பேசத் தயங்கும் மீன ராசி அன்பர்களே...!

இந்தவாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தங்க ஆபரணங்கள் சேரும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு. வாதம் பித்தம் சம்பந்தமான நோய் ஏற்பட்டு நீங்கும். கோபம் குறையும். தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பெற்றோர் உடல் நிலையில் கவணம் எடுக்கவும். வார இறுதியில் தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். கெட்ட கனவுகள் தோன்றி மறையும். எதிர்காலம் குறித்த பயம் தோன்றும். மத்திம பலன் உள்ள காலம் இது.

அதிர்ஷ்ட திகதி : 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .