2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (30.06.2013 - 06.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூன் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தவார பலன்கள் (30.06.2013 - 06.07.2013)
 
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

காலம் தவறாமையை கடைப்பிடிக்கும் மேட ராசி அன்பா்களே..!
 
இந்தவாரம் ஆரம்பத்தில் விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும். வரவும் செலவும் சமமாக இருக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள இசையில் ஆர்வம் செலுத்தலாம். செய்தொழிலில் அதிகாரிகள் ஆதரவு, பதவி, ஊதிய உயர்வு ஆகியவை ஏற்படும். சகோதர வழியில் ஒற்றுமை பிறக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பெண்கள் வழியில் உள்ள உறவினர்களிடையே மதிப்பு கூடும். பிறருடைய யோசனைகள் நல்ல பலன்களைக் கொடுக்கும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
 
 
 
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் இடப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொழிலில் நல்ல மாற்றம் மற்றும் புது தொழிலில் லாபம் அமையும். கடிதங்கள் மூலம் சுபசெய்தி ஒன்று வந்து சேரும். உறவினர்கள் சந்தித்து மகிழும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நற்பெயரைப் பெறுவீர்கள். பணியில் அனுபவம் மிக்க வேலையாட்கள் கிடைப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். பல நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் உண்டாகும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்

 
 
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

குலம், கோத்திரம் பார்க்காமல் மனித நேயத்துடன் உதவும் உள்ளம் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தொடக்கத்தில் மன அமைதிக்கு இடையூறு ஏற்படும் நிகழ்வுகள் நடக்கலாம். உடல்  ஆரோக்கியம் திருப்தி தராது. வாகன பயணத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. பொறுப்பு அதிகரித்த நிலையிலேயே இருந்து வரும். பணிபுரியும் இடத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம். இருந்து வந்த வருமானங்கள் சிறிது குறையலாம். இருந்த போதிலும் வார இறுதியில் பெரியவர்களின்  சொல்லுக்கு மரியாதை கொடுப்பது நன்மை தரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம், நீலம்
அதிர்ஷ்ட தெய்வம் : நவகிரகம்
 
 
 
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதையும் உடனே கிரகிக்கும் அறிவாற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். இல்லத்தில் மருத்துவ செலவுகள் வந்து போகும். பொதுநலத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற மனபயம் நீங்கும். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் காண முடியும். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். பழைய பொருட்களை  உங்களுடைய ரசனைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்வீர்கள். வீணான விவாதங்களை தடுப்பதின் மூலம் சில பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மேலும் பெண்களிடம் இருந்து சில உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வார இறுதியில் வியாபாரத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் அதை சமாதானத்தால் சாதிக்கும் உள்ளம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் இல்லத்தில் சுப காரியம் நடக்கும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் அதிக மதிப்பு கூடும். மனதில் போட்ட திட்டம் எளிதாக நிறைவேறிவிடும். ஒற்றுமைக்கு குறைவு வராது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். பெண்களின் தேவைகளை பெற்றோர்கள் பூர்த்தி செய்வார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகள், தகுதி ஆகியவைகளை மீண்டும் பெறுவீர்கள். சில தவறான நண்பர்களை அடையாளம் காணுவீர்கள். மனதில் தைரியத்துடன் எதையும் செய்வீர்கள். இருந்த போதிலும் பொருளாதார நிலையில் கவனம் தேவை. பணியில் உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை அவசியம். இந்தவாரம் சுமாராகவே செல்லும்.
 
அதிர்ஷ்ட திகதி : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்
 
சந்திராஷ்டமம்:
ஜூன் 29ஆம் திகதி காலை 07.38 மணியிலிருந்து ஜூலை 01ஆம் திகதி மாலை 03.27 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கலைப் பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிக்க  மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இல்லத்தில் அமைதி திரும்பும். நிர்வாகத்தினருடைய ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் திடீர் வளர்ச்சி உண்டாகும். புதிய வியாபார உக்திகள் உண்டாகும். மனச்சுமை குறையும். பெண்களின் புதிய தொழில் முயற்ச்சி வெற்றி அடையும். சில பெரிய பொறுப்புக்கள் தேடி வரும்.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
சந்திராஷ்டமம்:
ஜூலை 01ஆம் திகதி மாலை 03.27 மணியிலிருந்து ஜூலை 03ஆம் திகதி காலை 02.37 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்ச்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

விடா முயற்சியால் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணும் துலா ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி  உண்டாகும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறலாம். அனாவசியப் பேச்சைக் குறையுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். உடலில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கப் பெறுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தங்களுடைய மறதியால் சில வீண் பிரச்சினைகள் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம் : ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி
 
சந்திராஷ்டமம்:
ஜூலை 03ஆம் திகதி மாலை 02.37 மணியிலிருந்து ஜூலை 06ஆம் திகதி மாலை 03.22 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
 
குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
 
 
 
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

பல துறைகளிலும் ஆழ்ந்த சிந்தனை கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். புத்திசாலித்தனமான செயல்களால் புகழ் அதிகரிக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உங்களிடம் ஒருவிதமான தெளிவு காணப்படும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆனாலும் வார இறுதியில் சில கசப்பான நினைவுகள் வந்து மனதை சங்கடப்படுத்தும். மறைமுகமாக எதிரிகள் தோன்றுவார்கள். எனவே கவனமுடன் இருப்பது அவசியமாகும்.
 
அதிர்ஷ்ட திகதி : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையை கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் பக்குவம் உங்களிடத்தில் காணப்படும். பெற்றோர்களின் ஆதரவு பெறுகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடினமான சில வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்தவர்கள் சில நுணுக்கங்களைக் கற்றுத் தருவார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதால் விருப்பங்கள் நிறைவேறும். வரவைவிட செலவு கூடினாலும் சேமிப்பில் ஒன்றும் குறையாது. வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்குமோ என்ற காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கலாம்.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடந்த காலத்தை என்றும் மறக்காத மகர ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் செய்ய மறந்த காரியம் ஒன்றை துரிதமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தமாட்டீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மனக்குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடும். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை மீண்டும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும். பெண்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டு. குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சின்ன சின்ன எதிர்ப்புக்கள் இருக்கும். அதிரடி மாற்றங்கள் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நல்லது.
 
அதிர்ஷ்ட திகதி : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம் : பெருமாள்
 
 
 
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

உதவி என கேட்டு வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் கும்ப ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். சில முக்கியமான பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். கன்னிப் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். முக்கியமானவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்களிடம் நயமாகப் பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். தன்னம்பிக்கையோடு செயல்படும் நாள். வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்து அலைமோதும். மனதிற்கு இனிய நிகழ்வு ஒன்று நடைபெறும். மகிழ்ச்சியான வாரம் இது.
 
அதிர்ஷ்ட திகதி : 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சூரியன்)
 
 
 
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற உள்ளம் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!
 
இந்தவாரம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். நிலம், சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் நீங்கும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம். நட்பு வட்டம் விரிவடையும் நாள். உற்றார், உறவினர்களை கண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. ஆனால் வார இறுதியில் உங்களுடைய படைப்புக்களுக்கு மற்றொருவர் உரிமை கொள்வார்கள். வீண் பழிகள் மற்றும் அவச்சொற்கள் உண்டாகும். எனவே கவனம் அவசியம்.
 
அதிர்ஷ்ட திகதி : 05
அதிர்ஷ்ட நிறம் : கறுப்பு தவிர
அதிர்ஷ்ட தெய்வம் : பிரம்மா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X